• தனுஷுடன் இணைய விரும்பும் சினேகா உல்லல்



    தென்னிந்திய நடிகை சினேகா உல்லல் நாயகன் தனுஷுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
    கொலிவுட்டில் 'என்னை தெரியுமா' படத்தில் நடித்த சினேகா உல்லல், தற்போது தெலுங்கு மற்றும் மலையாளம், கன்னடப் படங்களில் நடித்து வருகிறார்.


    இணைய தளத்தில் இவரின் 'lick' எனும் காணொளி வேகமாக ரசிகர்கள் மத்தியில் உலா வருவதாக கொலிவுட் வட்டாரம் கூறுகிறது.

    இதுகுறித்து சினேகா உல்லால் கூறியதாவது, இந்த மாதிரியான காணொளி எப்படி இணையதளத்துக்கு சென்றது என எனக்கு எதுவும் தெரியாது.

    காணொளியை இணையதளத்தில் நிறைய பேர் கண்டு ரசிப்பதாக என் நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.

    கடந்த ஆண்டு ,உடல் வலியின் காரணமாக என்னால் தமிழ்ப்பட வாய்ப்புகளை ஏற்க முடியாமல் போனது.

    கொலிவுட்டில் நாயகன் தனுஷுடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன். வாய்ப்பு கிடைத்தால் ஜீவா, ஜெயம் ரவியுடன் நடிக்க தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment