• கேவி ஆனந்திடம் கதை கேட்டார் ரஜினி



    இப்போதெல்லாம் ரஜினி நடிக்கிறார் என ஒரு படத்தின் செய்தி வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை கிளறும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்த யூகங்கள் வந்துவிடுகின்றன.


    சுல்தானில் நடிப்பார் என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே ராணா பற்றிய செய்தி வந்தது. பின்னர் அறிவிப்பாக மாறியது.

    ராணா படம் பற்றி பேசிக் கொண்டிருந்த நேரத்தில்தான், கோச்சடையான் அறிவிப்பு வந்தது.

    கோச்சடையான் படப்பிடிப்பே இன்னும் தொடங்கவில்லை. ஆனால் அதற்குள் ஷங்கர் - ரஜினி படம் பற்றி பேச ஆரம்பித்தார்கள். அட, இப்போது இன்னும் ஒரு படம் குறித்த வதந்தி.

    இந்த முறை, ரஜினியின் வழக்கமான இயக்குநர்கள் இல்லை. இது வேற செட்டப்.

    அயன், கோ இயக்குநரும், சிவாஜி படத்தின் ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்திடம் ரஜினி கதை கேட்டுவிட்டார், ஈராஸ் நிறுவனம் அந்தப் படத்தை தயாரிக்கிறது என்றெல்லாம் கொளுத்திப் போட்டுவிட்டனர்.

    ஆர்வத்தோடு படித்த ரசிகர்கள், அடுத்து வதந்திக்காக காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர்!

0 comments:

Post a Comment