• அஜித் படத்திற்கு நயன்தாரா போட்ட கண்டிஷன்!



    அஜித் படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா போட்டிருக்கும் கண்டிஷன் சமாச்சாரம்தான் கோடம்பாக்கத்தில் ஹாட் டாக்காக இருக்கிறது.
    சிம்புவுடன் காதல் முறிவு, பிரபுதேவாவுடன் காதல், கல்யாண செய்திகள், சினிமாவில் இருந்து விலகல், பிரபுதேவாவுடன் காதல் முறிவு என தொடர்ந்து ஏதாவது ஒரு செய்தியில் இடம்பெற்று வரும் நயன்தாரா, சினிமாவுக்கு ரீஎண்ட்ரி ஆகிறார். மேனேஜர், பி.ஆர்.ஓ. என யாருடைய தயவும் இல்லாமல் நேரடி டீலிங்கில் இறங்கியிருக்கும் நயன்தாரா, பில்லா பார்ட் 2வில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் அது உறுதிபடுத்தப்படாத செய்திதானாம்.

    இதனிடையே பில்லா-2 படத்தை தொடர்ந்து அஜித் அடுத்து நடிக்க இருக்கும் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக பேச்சு அடிபட்டு வருகையில், இந்த படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவை அணுகிய தயாரிப்பு தரப்பிடம் நயன்தாரா ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறார். அஜித்துடன் நடிக்க எனக்கு விருப்பம்தான். அதற்காக நீங்க கேட்கிற தேதியை அப்படியே மாதக்கணக்கில் என்னால கொடுக்க முடியாது. அவர் இந்த படத்திற்காக என்ன தேதி கொடுத்திருக்கிறார் என்று முதலில் சொல்லுங்க. அதுக்கேற்ற மாதிரி என் தேதிகளை ஒதுக்குகிறேன், என்று கூறியிருக்கிறாராம் நயன்.

0 comments:

Post a Comment