நாயகி அனுஷ்காவுடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன் என்று ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
கொலிவுட்டில் அமீரின் இயக்கத்தில் ஆதி பகவன் மற்றும் பூலோகம் ஆகிய படங்களில் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.
மேலும் கொலிவுட் படங்களில் நடிப்பதோடு, முதன் முதலாக ஆயத்த உடை என்ற நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துவருகிறார்.
சமீபத்தில் நடந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஜெயம் ரவி பேசியதாவது, நான் சினிமாவில் வளர்வதற்கு என் தந்தை மோகன், சகோதரர் ராஜா இருவரும் உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பொருத்தமான நாயகி என்றால் அது ஜெனிலியாவாகத் தான் இருக்கும்.
இருப்பினும் நாயகி அனுஷ்காவுடன் இணைந்து நடிக்க விருப்பமாக உள்ளது என்று தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
0 comments: