• மலையாள பட அதிபர் மீது புகார் கொடுத்துள்ள நாயகி ஸ்ரேயா



    மலையாள பட அதிபர் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நாயகி ஸ்ரேயா புகார் கொடுத்துள்ளார்.
    நாயகி ஸ்ரேயா நடித்த போக்கிரி ராஜா என்ற மலையாள படம் அண்மையில் திரைக்கு வந்தது. அதில் மம்மூட்டி, பிருத்விராஜ் நடித்துள்ளனர்.


    இந்த படத்தை தாமஸ் ஆண்டனி என்பவர் தயாரித்துள்ளார். இந்நிலையில் தாமஸ் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஸ்ரேயா புகார் கொடுத்துள்ளார்.

    மேலும் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளார்.

    இது குறித்து ஸ்ரேயா கூறியதாவது, போக்கிரி ராஜா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட போதே அதை மொழிமாற்றம் செய்து வெளியிடக் கூடாது என்று நிபந்தனை விதித்து தான் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்.

    மேலும் அதற்கான ஒப்பந்தத்தில் நானும், தாமஸ் ஆண்டனியும் கையெழுத்திட்டுள்ளோம். இந்நிலையில் ஒப்பந்தத்தை தாமஸ் மீறிவிட்டார்.

    அதனால் அவர் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன்.

    போக்கிரி ராஜா படத்தை தமிழ் உட்பட வேறு எந்த மொழியிலும் மாற்றம் செய்து வெளியிட தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் தீர்மானித்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment