டாப்சியின் நடிப்பு என்னை கவர்ந்துள்ளது என்று தெலுங்கு தயாரிப்பாளர் லட்சுமி மஞ்சு தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய மொழிப்படங்களில் நடிக்கும் நாயகி டாப்சீயை தெலுங்கு படத்தயாரிப்பாளரும் நடிகையுமான லட்சுமி மஞ்சு புகழ்ந்துள்ளார்.
கடந்த 1986ஆம் ஆண்டு ஆந்திராவில் உலுக்கிய புயல் சம்பவத்தை மையமாக வைத்து இரு மொழிகளில் லட்சுமி மஞ்சு படத்தை தயாரித்து, நடித்துள்ளார்.
இவருடன் டாப்சீ, ஆதி, சந்தீப் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இதுகுறித்து லட்சுமி மஞ்சு கூறியதாவது, என் தயாரிப்பில் தெலுங்கில் அறிமுகமான டாப்சீக்கு இந்தப்படத்தில் வித்தியாசமான கதாப்பாத்திரம் கொடுத்து நடிக்க வைத்துள்ளோம்.
அவர் எந்த மாதிரி கதாப்பாத்திரத்தில் நடிக்க கனவு கண்டிருப்பாரோ அதில் நடிக்க வைத்துள்ளேன்.
இந்தப்படத்தில் டாப்சீயின் நடிப்பு என்னை கவர்ந்தது. படத்தில் அவரின் நடிப்பை பார்த்து விட்டு ரசிகர்களும் பட உலகும் நிச்சயம் பாராட்டும் என்று லட்சுமி மஞ்சு தெரிவித்துள்ளார்.
0 comments: