கதாநாயகிகள் சிரித்தே தங்களுக்கு தேவையான காரியத்தை சாதித்து விடுவார்கள் எனறு தீக்சா சேத் கூறியுள்ளார்.
ராஜபாட்டை படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தீக்சா சேத்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, சினிமாவில் கவனமாக அடி எடுத்து வைக்கிறேன். நல்ல கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கிறேன்.
பெண்களைப் பொறுத்த வரையில் கவர்ச்சியாலும், பொருத்தமான உடை அணிந்து கொள்வதாலும் எல்லாவற்றையும் சாதிக்கும் திறமை உள்ளது.
என்னைப் பொறுத்தவரை குழந்தைத்தனமான குணம், சுதந்திரமான வாழ்க்கையை விரும்புகிறேன்.
கதாநாயகிகள் உட்பட வேறு எந்த பெண்ணுக்குமோ பிளஸ் ஆக இருப்பது புன்னகைதான்.
அழகான ஒரு சிரிப்பால் எந்த காரியத்தையும் சாதிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

0 comments: