• ரீமாசென் இன்று திருமதியாகிறார்



    தென்னிந்திய நாயகி ரீமாசென், தனது காதலரான ஷிவ் கரண்சிங்கை இன்று மாலை திருமணம் செய்து கொள்கிறார்.
    கொலிவுட்டில் மின்னலே, தூள், கிரி, பகவதி, போன்ற படங்களில் நட்சத்திர கதாநாயகர்களுடன் நாயகி ரீமாசென் நடித்துள்ளார்.


    கடைசியாக ரீமாசென் ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் ரீமாவின் கதாப்பாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் நீண்ட வருடங்களாக தொழிலதிபரும் தனது உறவினருமான ஷிவ் கரண் சிங் என்பவரை நாயகி ரீமாசென் காதலித்து வந்தார்.

    ஆரம்பத்தில் தன்னுடைய காதலை மறுத்தாலும் பின்னர் இருவரும் தங்களுடைய காதலை ஒப்புக்கொண்டனர்.

    சமீபத்தில் இவர்களது நிச்சியதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று மாலை நாயகி ரீமாசென் தன்னுடைய காதலரை கரம் பிடிப்பதன் மூலம் திருமதியாகிறார்.

    இன்று மாலை 3 மணிக்கு புதுடெல்லிக்கு அருகே மணமகன் ஷிவ்கரண் சிங்கின் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற உள்ளது.

    திருமணத்திற்கு பாலிவுட், கொலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

0 comments:

Post a Comment