• அர்ஜுன் நடிப்பில் உருவான பிரசாத் படம்



    இயக்குனர் மணிரத்னத்தின் கடல், வசந்தின் மூன்று பேர் மூன்று காதல், என்று ஓக்ஸன் கிங் அர்ஜுன் திரையுலகில் மும்மரமாக நடித்து வருகிறார்.

    இந்நிலையில் ஏ.கே.கே. என்ட்டர்டெயின்மெண்ட் படக்கம்பெனியின் 'பிரசாத்' என்ற படத்திலும் அர்ஜுன் நடித்துள்ளார்.


    இப்படம் குறித்து ஓக்ஸன் கிங் கூறியதாவது, இந்தப்படத்தில் எனக்கு ஓக்ஸன் காட்சிகள் இல்லை. பாடல்களும் இல்லை.

    நான் மெக்கானிக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன். ஒரு மாற்றுத்திறனாளி மகனை எப்படி வளர்க்கிறேன் என்பதை மிகவும் நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார்கள்.

    இதில் என் மகனாக சங்கல்ப் என்ற சிறுவன் நடித்துள்ளான். அவனால் கேட்கவோ,பேசவோ முடியாது.

    நாங்க சொல்லிக் கொடுத்ததை விட அவன் நடிப்பில் அசத்தினான்.

    பெர்லின் உலகப்பட விழாவில் இப்படத்தை திரையிட்டார்கள். வெளிநாட்டு திரை ரசிகர்கள் படத்தை பார்த்து விட்டு கண் கலங்கினார்கள்.

    படத்தின் உணர்வுக்கு ஏற்ப இளையராஜாவின் இசை இருந்தது. படத்தின் இறுதிக்காட்சி ரசிகர்களுக்கு நல்ல கருத்தை தெரிவிக்கும் என்று அர்ஜுன் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment