• காதலை புது விதமாக சொல்லும் 'கல்லூரியில் என் காதலி'!



    இளமை காதல், முதுமை காதல், காணமல் காதல், கண்டதும் காதல், ஒருதலை காதல், முக்கோன காதல், திருட்டு காதல், திகட்டாத காதல் மற்றும் கள்ளக்காதல் என இதுவரை பல காதல் கதைகள் திரையில் சொல்லப்பட்டுள்ளன. இந்த காதல்களுக்கு மத்தியில் ரம்மியமான ஒரு காதல் கதையோடு உருவாகும் படம் 'கல்லூரியில் என் காதலி'.


    சஸ்பென்ஸ், திகில், நகைச்சுவை கலந்து இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருகிறது. 'அன்பு', 'காதல் கிசுகிசு' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த அன்பு இந்த படத்தின் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை சிந்து துலானி நடிக்கிறார். இவர்களுடன் நடிகை மந்திரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

    கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கே.வீரா. அருள்மணி இசையில் வெங்கடேஸ்வரா வடச்சேரி ஸ்ரீகாமாட்சி அம்மன் ஸ்க்ரீன்ஸ் சார்பில் இராமச்சந்திரன், தேவிகா சுந்தரம் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

0 comments:

Post a Comment