உலகநாயகன் கமல்ஹாசன், கொலைவெறி தனுஷ், இயக்குனர் ஷங்கர், ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகிய பிரபலங்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஆஸ்கார் நிறுவத்தின் படைப்புகளில் நடிக்கின்றனர்.
கமல் 'தலைவன் இருக்கிறான் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில் ஜாக்கிசான் கம்லுடன் இணைந்து காட்சியளிக்கவிருக்கிறார் என்பது குறிபிடத்தக்கது. தனுஷ் ஆஸ்கார் நிறுவனத்திற்காக ஹிந்தி டைரக்டர் ஒருவரின் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் ஷங்கர் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் எடுக்க முடிவெடுத்துள்ள நிலையில் படத்தின் நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுக்கும் பணியில் உள்ளார்.
அர்ஜுனும் ஆஸ்கார் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன் ஈரம் படத்தின் இயக்குனர் அறிவழகன் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இவ்வாறாக ஒரே நேரத்தில் ஆஸ்கார் நிறுவனம் ஐந்து படங்களை தயாரிக்கவிருக்கிறது.

0 comments: