நட்சத்திர நாயகி ஐஸ்வர்யாராய் இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்று பாலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராய், கடைசியாக குஷாரிஷ் படம் 2010-ல் திரைக்கு வந்தது.
பின்னர் ஐஸ்வர்யா கர்ப்பமானதால் படவாய்ப்புகளை தவிர்த்து, நடிக்க வில்லை.
கடந்த வருடம் நவம்பர் 16ம் திகதி ஐஸ்வர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தையை பார்த்துக் கொள்வதிலேயே முழு நேரமும் செலவிடுகிறார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மீண்டும் நடிப்பாரா என்று அவரது கணவர் அபிஷேக் பச்சனிடம் பத்திரிக்கையாளர் கேட்டனர்.
இதற்கு பதிலளித்து அபிஷேக் கூறியதாவது, ஐஸ்வர்யாராய் குழந்தையுடன் முழு நேரமும் விளையாடும் தாயாக இருக்கிறார்.
மீண்டும் நடிப்பதா? வேண்டாமா என்பது ஐஸ்வர்யாராய் விருப்பத்தை பொறுத்தது.
அவர் எப்போது நடிக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்போது நடிக்கலாம் என்று அபிஷேக் பச்சன் கூறினார்.

0 comments: