• இலங்கை அகதியாக அஜித் நடிக்க வில்லை: பில்லா 2 படக்குழு



    பில்லா 2 படத்தில் அஜீத்குமார் இலங்கை அகதியாக நடிக்க வில்லை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    கொலிவுட்டில் தல அஜீத்குமார் நடிக்கும் பில்லா-2 படம் மே 2வது வாரத்தில் திரைக்கு வருகிறது.


    இந்நிலையில் பில்லா 2 படத்தில் அஜீத் குமார், இலங்கை தமிழ் அகதி வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ் அகதியான அவர் எப்படி சர்வதேச கடத்தல்காரனாக மாறுகிறார் என்பது போல் கதை சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ஆனால் படக்குழுவை சேர்ந்தவர்கள் இதை மறுத்தனர். அஜீத் இலங்கை அகதியாக நடிக்கவில்லை என்றும் தமிழகத்தில் இருந்து இலங்கை சென்ற தமிழ் தம்பதிக்கு பிறந்த மகனாக நடிக்கிறார் என்றும் கூறினர்.

    பில்லா 2 சண்டை காட்சிகள் நவீன தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் ரகத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதில் கதாநாயகியாக பார்வதி ஓமனக்குட்டன் நடிக்கிறார். சக்ரிபோலட்டி இயக்குகிறார்

0 comments:

Post a Comment