கொலிவுட்டில் ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி போன்ற வெற்றிப் படங்களை ராஜா இயக்கியுள்ளார்.
கொலிவுட்டின் பிரபல இயக்குனர் ஜெயம் ராஜா, சென்னை நீலங்கரையில் உள்ள ஊடகம் மற்றும் கலை அறிவியல் கல்லூரிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார்.
அப்போது கல்லூரி மாணவர்கள் ஜெயம் ராஜாவிடம் கேள்வி கேட்க, அவர் பதிலளித்தார்.
உங்கள் படங்கள் குடும்பம் பாணியை மட்டும் நம்பி உள்ளதே?
என்ன கதை என்பதை விட அதில் சொல்லப்படும் கருத்து முக்கியம். உலக பொருளாதார பிரச்சினையில் எல்லா நாடுகளும் பாதிக்கப்பட்ட போது நம் இந்தியா மட்டும் பாதிக்கப்படவில்லை.
அதற்கு காரணம் நமது குடும்ப அமைப்பு தான், இந்த குடும்ப கூட்டமைப்பு சேர்த்து வைக்கும் குணம் கொண்டது.
இப்படி சேர்த்து வைக்கும் பொறுப்புதான் நம்மையெல்லாம் பிரித்து போய்விடமால் இணைத்துப் பார்க்கிறது. அப்படிப்பட்ட குடும்பம், பாசம், விலக்கிவிட்டு படம் செய்வது நல்லதா?
அடுத்தபட அறிவிப்பு தாமதமாகிறதே?
ஒரு வெற்றியைப் போலவே அதை தக்க வைப்பது முக்கியம் சிரமமும் கூட. இந்த அக்கறைதான் தாமதத்தின் காரணம் விரைவில் இரண்டொரு மாதத்தில் அடுத்த பட அறிவிப்பு வரும்.
விரும்பித்தான் இந்த தொழிலுக்கு வந்தீர்களா?
ஆமாம், சினிமா குடும்பச் சூழலில் வளர்ந்தவன் நான். நான் வரக்கூடாதா? நான் விருப்பி பரிபூர்வமாக அடம்பிடித்து வீம்பு பிடித்துதான் இந்தத் துறைக்கு வந்தேன்.
உங்கள் கனவு படம் எது? எப்போது?
அடுத்தப்படம் எனக்குப் பிடித்த படமாக இருக்கும். ஒவ்வொரு படியாக ஏறவே ஆசை முதலில் பிடித்த கதை பிறகு கனவுப்படம்.
தமிழ் சினிமா நேற்று இன்று நாளை எப்படி?
மனித வாழ்க்கை நேற்று இன்று நாளை போலவே சினிமா இருக்கிறது.
ஏனென்றால் சமுதாயத்தை பிரதிபலிப்பதுதான் சினிமா. முன்பெல்லாம் திரையில் படம் தெரிவதே ஆச்சரியமாக இருக்கும்.
இன்று நிறைய படங்கள் பார்த்து சாதாரண பார்வையாளனே விமர்சகர் அளவுக்கு வளர்ந்திருக்கிறான். இந்த தலைமுறையைப் புரிந்து செய்ய வேண்டியிருக்கிறது.
நடிக்க வேண்டியிருந்தால் எந்த கதாநாயகியுடன் நடிக்க விரும்புகிறீர்கள்?
என் மனைவி கூடத்தான்.
முதல்பட அனுபவம் சந்தோஷம் இன்றும் உள்ளதா?
எத்தனை படம் எடுத்தாலும் முதல்பட அனுபவம் மறக்க முடியாது. நான் முதலில் 'ஹனுமான் ஜங்ஷன்' என்கிற தெலுங்குப் படத்தைதான் இயக்கினேன்.
தியேட்டரில் போய்ப் பார்த்த போது தான் கீழே விழுந்து சிரிப்பதை பார்த்தேன். அவ்வளவுதான் சந்தோஷமாக இருந்தது.
தமிழில் முதல்படம் 'ஜெயம்' அதுவும் தம்பி ரவியை ஹீரோவாக்கிய படம். உதயம் தியேட்டரில் தம்பியைப் பார்த்து ரசிகர்கள் கொண்டாடியது. ஆரவாரம் செய்தது. ஒரே நாளில் நாயகனாகி விட்டான். அதை மறக்கவே முடியாது.

0 comments: