திறமையினால் மட்டுமே சினிமாவில் வெற்றிபெற முடியும் என்று நாயகி அசின் கூறியுள்ளார்.
திரையுலக கதாநாயகி அசின் தற்போது ஹவுஸ்புல் 2, போல்பச்சன் என இரு பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
ஹவுஸ்புல் 2 படம் வருகிற ஏப்ரல் 5ம் திகதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில் ஊடகவியலாளர் சந்திப்பில் நாயகி அசின் கூறியதாவது, சினிமாவில் தனியாக போராடி எனது சொந்த திறமையினால் முன்னேறியுள்ளேன்.
நான் நடிகையாக அறிமுகமான போது யாரும் எனக்கு உதவ வில்லை.
சினிமா உலகில் ஆரம்ப காலத்தில் கஷ்ட நஷ்டங்களை பார்த்து விட்டேன். அப்போதும் தனியாகத்தான் இருந்தேன். இப்போதும் தனியாகவே இருக்கிறேன்.
அதிர்ஷ்டம் இருந்தால் சினிமாவில் உயரலாம் என்கிறார்கள். ஆனால் அதிர்ஷ்டத்தை நம்பி வீட்டில் இருந்தால் எதுவும் சாதிக்க இயலாது. திறமையின் மூலமாகவே முன்னேற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

0 comments: