கொலிவுட்டில் நாயகன் கார்த்தி மற்றும் அனுஷ்கா இணைந்து அலெக்ஸ் பாண்டியன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.
சுராஜ் இயக்கும் இப்படத்திற்கு, கார்த்தியின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா தான் இப்படத்தை தயாரிக்கிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை விமான நிலையம் அருகே நடந்து வருகிறது. வழக்கம் போல் காலையில் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர் படக்குழுவினர்.
அப்போது பெப்சி தொழிலாளர்கள் அங்கு வந்து படப்பிடிப்பை நடத்தவிடாமல் ரகளை செய்துள்ளனர். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே இயக்குநர் அமீரின் தூண்டுதலின் பேரில் தான் இப்பிரச்னை உருவாகி இருப்பதாக இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குற்றம் சாட்டி இருக்கிறார்.
பருத்திவீரன் பட பஞ்சாயத்தை மனதில் வைத்து பெப்சி மூலமாக இயக்குநர் அமீர் மறைமுகமாக தூண்டி வருகிறார் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் இதனை இயக்குநர் அமீர் மறுத்து இருக்கிறார். என்னுடைய சொந்த பிரச்னைக்காக நான் யாரையும் பயன்படுத்தும் அளவிற்கு போக மாட்டேன் என்றும் எனக்கும் இந்த பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.

0 comments: