• ”லவ் ஆன்தம்” இசை ஆல்பம் ரிலீஸ் பற்றி சிம்பு!


    ”லவ் ஆன்தம்” இசை ஆல்பம், இன்னும் இரண்டு மாதங்களில் மிகப் பிரமாண்டமாய் வெளியாகும் என்று சிலம்பரசன் கூறினார்.

    “ஒஸ்தி” படத்திற்கு சிம்பு, கடந்த இரண்டு மாதமாக அமெரிக்காவில் இருந்தார். தற்போது சென்னை திரும்பிய சிம்பு நிக் ஆர்ட்ஸ் தயாரிக்கும் “வேட்டை மன்னன்” பட ஷீட்டிங்கில் கலந்து கொள்கிறார். இது பற்றி சிம்பு கூறியதாவது :

    ”இரண்டு மாத்திற்கு பிறகு கேமரா முன்பு நிற்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. சர்வதேச அள்வில் ’லவ் ஆன்தம்’ இசை ஆல்பத்தை வெளியிட இருப்பதால் மிகப் பிரமாண்டமாக உருவாக்க முடிவு செய்துள்ளேன். இப்பணிகளுக்காக அமெரிக்கா சென்றிருந்தேன். முதலில் ஒரு பாடலை மட்டும் வெளியிட நினைத்தேன். அதன்பிறகு சிலர் ஆலோசனை பேரில் ஆல்பமாகவே வெளியிடப் போகிறேன். இதற்காக பிரபல ஹாலிவுட் இசை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். விரைவில் இது பற்றி அறிவிப்பேன். இந்த இசை ஆல்பத்தில் 3 பாடல்களுக்கு யுவன் ஷங்கர் ராஜாவும், சில பாடல்களுக்கு நானும் இசை அமைக்கிறோம். மொத்தம் 8 அல்லது 9 பாடல்கள் இந்த ஆல்பத்தில் இடம்பெறும்.” இவ்வாறு சிம்பு கூறினார்.

    ”வேட்டை மன்னன்” ஆக்‌ஷன் படமாக எடுக்கப்படவிருக்கிறது. இதையடுத்து சிம்புவின் “போடா போடி” ஷீட்டிங்கிற்காக ஹாங்காக் செல்லவிருக்கிறது படக்குழு.

0 comments:

Post a Comment