சிம்பு தனது ஒரு தலையான காதலை பற்றியும், அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்வது பற்றியும் பேட்டி ஒன்றில் அறிவித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது :
”எனது வீட்டில் திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டேன். ஒருதலையாக காதலித்து ஏமாந்தது போதும். மேலும், கடந்த 4 ஆண்டுகளாக திருமணத்தை தள்ளிப்போட்டேன். இனியும் தள்ளிப்போட முடியாது. அடுத்த வருடம் கண்டிப்பாக எனது திருமணம் நடக்கும். அதற்காக வீட்டில் பெண் பார்க்கிறார்கள்” என்று கூறினார்.
ஒரு வழியாக மகன் திருமணத்திற்கு சம்மதித்துள்ளதால் அவரது தாய் மகிழ்ச்சியாக உள்ளார். பெண் பார்ப்பதற்காக சிம்புவிடம் அவரது தாய், மனதில் யாராவது இருக்கிறாரா..? என்று கேட்டார். அதற்கு அப்படியெல்லாம் யாரும் இல்லை, நீங்களே நல்ல அழகான பெண்ணா பாருங்கள் அம்மா என்று கூறிவிட்டார். பிறக்கும் குழந்தை அழகாக இருக்க வேண்டும் என்பதால் அழகான பெண்ணாக பார்க்கச் சொல்லியிருக்கிறார் சிம்பு.
0 comments: