ஜப்பானில் நடந்த ஒலக்கா திரைப்பட விழாவில் சியான் விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் படத்துக்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது கிடைத்துள்ளது.
கொலிவுட்டில் சீயான் விக்ரம், அனுஷ்கா, அமலாபால், சந்தானம், சிறுமி சாரா, ஆகியோர் நடித்த தெய்வத் திருமகள் திரைப்படம் வெற்றி பெற்றது.
மனவளர்ச்சி குன்றிய சீயான் விக்ரமுக்கு குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் அவரது மனைவி இறந்து விடுகிறார்.
பின்னர் மனைவி குடும்பத்தினர் குழந்தையை அழைத்துச் சென்று விடுவர். அவர்களிடமிருந்து குழந்தையை காப்பாற்ற விக்ரம் நீதிமன்றத்தை நாடி வரும் சம்பவங்களை இயக்குனர் விஜய் திரைக்கதையாக தொகுத்து வழங்கி, இயக்கியுள்ளார்.
இந்நிலையில் தெய்வத்திருமகள் படம் ஜப்பானில் நடைபெற்ற ஒலக்கா திரைப்பட விழாவில் பங்கேற்று விருதுகளை வாங்கியுள்ளது.
மொத்தம் உள்ள 4 விருதுகளில் 2 விருதுகளை தெய்வத்திருமகள் படம் பெற்றது. ஒரு விருது மலேசிய இயக்குனருக்கும், இன்னொரு விருது கொரியன் படத்துக்கும் கிடைத்தன.
இப்படவிழாவில் தெய்வத்திருமகள் படத்துடன் பல்வேறு நாடுகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டன. நடிகர் விக்ரம், இயக்குனர் விஜய் ஆகியோர் படவிழாவில் பங்கேற்றனர்.
விருது கிடைத்தது பற்றி தயாரிப்பாளர் மோகன் நடராஜன் கூறும்போது, தெய்வத்திருமகள் படத்துக்கு 2 விருதுகள் கிடைத்திருப்பது தமிழனுக்கு கிடைத்த பெருமை.
விக்ரம் சிறுவன், மனநிலையுடன் உடம்பை வருத்தி கஷ்டப்பட்டு நடித்தார். பேபிசாரா அசத்தலான நடிப்பை வழங்கி இருந்தார்.
அனுஷ்கா, அமலாபால் தங்களுடைய கதாப்பாத்திரங்களாகவே மாறி ஜொலிக்கிறார்கள். இயக்குனர் விஜய் அற்புதமான கதையை வழங்கினார். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
0 comments: