• திருமண செலவிற்காக திருமண மண்டபத்தை விற்ற பிரபல நடிகை...?



    நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் வரும் மே மாதம் 11 ஆம் தேதியன்று திருமணம் நடைபெறவிருக்கிறது. இதனால் திருமணத் தேதி நெருங்குவதால் சினேகா தான் ஒப்புக் கொண்ட படங்களை வேக, வேகமாக முடித்துக் கொண்டு வருகிறார்.


    இந்நிலையில் சினேகா தனது திருமண செலவுக்காக சொந்த ஊரான பண்ருட்டியில் உள்ள தனது திருமண மண்டபத்தை விற்றுவிட்டார் என்று பரபரப்பாக கூறப்படுகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திருமண மண்டபம் விற்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

    ஆனால் இதுகுறித்து சினேகா தரப்பிலிருந்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

0 comments:

Post a Comment