தனது நீண்ட நாள் கனவான முதியோர் இல்லம் கட்ட நாயகி ஹன்சிகா திட்டமிட்டுள்ளார்.
கொலிவுட்டில் இளைஞர்களின் கனவு நாயகியாக வலம் வருபவர்களில் ஹன்சிகாவுக்கு முக்கியமான இடம் உள்ளது.
மாப்பிள்ளை, வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களில் ஹன்சிகா நடித்துள்ளார்.
நாயகி ஹன்சிகா, தனது நீண்ட நாள் கனவை விரைவில் நனவாக்க இருக்கிறார்.
சின்ன வயதில் இருந்தே ஒவியம் வரையும் பழக்கம் உடைய ஹன்சிகா, இதுவரை சுமார் 100 ஒவியங்கள் வரைந்து வைத்து இருக்கிறார்.அவரது ஓவியங்கள் போட்டியில் முதல் பரிசும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் வரைந்த ஒவியங்களை வைத்து ஒவியக் கண்காட்சி ஒன்றை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.
ஒவியங்களை விற்று வரும் பணத்தினை கொண்டு தனது நீண்ட நாள் கனவான முதியோர் இல்லம் கட்ட ஹன்சிகா திட்டமிட்டுள்ளார்.
0 comments: