அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதிகளுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது என்பது நாம் அறிந்ததே. இக்குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்படும் என்று பாலிவுட் மற்றும் எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்தனர்.
குழந்தைக்கு நல்ல பெயர்களை சொல்லுமாறு ரசிகர்களிடம் அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார் அபிஷேக். இக்குழந்தையை இது நாள் வரை “பேட்டி பி” என்று அழைத்து வந்தனர் பச்சான்ஸ் குடுபத்தினர். சமீபத்தில் “அபிலாஷா” என்ற பெயரை குழந்தைக்கு வைக்கப்போவதாக தகவல்கள் வெளியாயின.
இதன் தொடர்ச்சியாக தற்போது ”பேட்டி பி” குழந்தைக்கு “ஆராத்யா பச்சன்” என்ற பெயரை வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆராத்யா என்றால் மரியாதைக்குரிய, வழிபாட்டுக்குரிய என்று அர்த்தமாம். ஆங்கிலத்தில் (Aa) என்று தொடங்கும்படியாக பெயர் இருக்க வேண்டும் என்று அமிதாப் குடும்பத்தினர் விரும்பியதால், இது நாள் வரை காத்திருந்து இந்த பெயரை தேர்வு செய்துள்ளனர்.
0 comments: