போடா போடி படத்தை தனிக்கவனத்தொடு, கை தேர்ந்த சிற்பி போல சிம்பு செதுக்கி வருவதாக கொலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய நட்சத்திர நடிகர் சரத் குமாரின் மகள் வரலட்சுமி 'போடா போடி' படத்தில் நாயகன் சிம்பு உடன் இணைந்து நடித்துள்ளார்.
சமீபத்தில் 'காதல்' காணொளியை சிம்பு வெளியிட்டார். இப்போது சிம்புவின் கவனம் முழுவதும் 'போடா போடி' படத்தின் மீது குவிந்துள்ளது.
சிம்பு, வரலட்சுமி சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகளை லண்டனில் எடுத்துள்ளார்கள்.
இதுகுறித்து நாயகன் சிம்பு கூறியதாவது, போடா போடி திரைப்படத்தின் காட்சிகளை எனக்கே உரிய கலை நுட்பத்தோடு செதுக்கி வருகிறேன்.
என்னுடைய ரசிகர்களுக்கு போடா போடி மிகப்பெரிய விருந்தாக அமையும் என்று நம்புகிறேன். நாயகி வரலட்சுமிக்கு முதல் படம் என்றாலும் நன்றாக நடித்துள்ளார்.
படப்பிடிப்பின் போது சாதாரணமாக பழகிய நாங்கள், தற்போது பிரியமுடியாத நண்பர்களாகி விட்டோம் என்று கூறியுள்ளார்.
0 comments: