சௌந்தர்யா அஸ்வின் தான் இயக்கும் 'கோச்சடையான்' படத்தின் படப்ப்பிடிப்பிற்காக மார்ச் 21 ஆம் தேதி லண்டன் செல்லவிருக்கிறார். லண்டனில் 20 - 30 நாட்களில் 'கோச்சடையான்' படத்தின் முதல் கட்ட படபிட்டிப்பு முடிவடையும் என எதிர்பார்க்கபடுகிறது.
இதனை அடுத்து பெங்களூர், மைசூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர் படக்குழுவினர். மொத்த படப்பிடிப்பும் ஜூன் மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3D படமான ’கோச்சடையான்’ படத்தில் 'மோசன் கேப்சர்’ டெக்னாலஜி முதல் முறையாக பயன்படுத்தப்படுகிறது. என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜப்பானில் உள்ள ரசிகர்களை கருத்தில் கொண்டு இந்த படம் ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ஜப்பானிலும் திரையிடப்படுகிறது.
மேலும், இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பாடவிருக்கிறார் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பாடல் ”ராஜராஜ சோழன்” படத்திற்காக சிவாஜி பாடிய 'தென்றலோடு உடன் பிறந்தால்' என்ற பாடல் வரிகளை கொண்டதாகும். ரஜினி பாடிய கடைசி பாடல் 'மன்னன்' படத்திற்காக ஜானகியுடன் இணைந்து பாடிய 'முல்லை பூங்கொடி' என்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: