தென்னக பிரியங்கா சோப்ரா என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் அமலாபால், கல்லூரி தேர்வுகளுக்கு பிறகு படங்களில் நடிக்க உள்ளார்.
கொலிவுட்டில் அதர்வாவுடன் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்திலும் சித்தார்துடன் காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் அமலா பால் நாயகியாக நடித்தார்.
காதலில் சொதப்புவது எப்படி படம் வெளியாகும் போது, அமலா பால் கல்லூரி தேர்வுகள் எழுத உள்ளதாக தகவல் வெளியானது.
இதையடுத்து தேர்வு நேரங்களில் கவனம் சிதறிவிடக்கூடாது என்பதற்காக, தேர்வு முடியும் வரை படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்தார்.
தற்போது தேர்வு எழுதி முடித்து விட்டதாகவும், அதற்காக அமலாபால், தன் தோழிகளுக்கு பிரமாண்ட விருந்து வைத்ததாகவும் கொலிவுட்டில் தெரிவித்துள்ளார்கள்.
மேலும், மலையாளத்தில் இயக்குனர் பிஜூ எடுக்கும் 'ஆகாஷத்திண்டே நிறம்' படத்திலும், டைமண்ட் நெக்லஸ் படத்திலும் நடித்து வருகிறார்.
0 comments: