தென்னிந்திய சினிமா நட்சத்திர நாயகன் மம்மூட்டியுடன் இணைந்து நடிக்க முன்னணி நாயகிகள் அதிக சம்பளம் கேட்டது குறித்து பட உலகம் பரபரப்பாக பேசி வருகிறது.
மலையாளத்தில் மம்மூட்டி நடிக்கும் புதிய படத்திற்காக முன்னணி நாயகிகளை தயாரிப்பாளர்கள் தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து தயாரிப்பாளர்கள் கூறியதாவது, மம்மூட்டியுடன் இணைந்து நடிக்க முதலில் திவ்யா ஸ்பந்தனாவிடம் பேசினோம்.
அவர் அதிக சம்பளம் கேட்டார். அதுமட்டுமின்றி சில கோரிக்கைகளை முன் வைத்தார். இது படத்தின் பட்ஜெட்டுக்கு ஒத்துவரவில்லை.
நாயகனை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் அதிக சம்பளம் கொடுத்து நாயகியை நடிக்கவைக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அடுத்து, இப்படத்தில் சமீராரெட்டியை நடிக்க வைக்க முடிவெடுத்து, அவரிடம் பேசினோம். அவர் கேட்ட சம்பளம் எங்களை மலைக்க வைத்தது.
படத்தில் வரும் முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்க பத்மப்ரியா பொருத்தமாக இருப்பார் என்று யோசித்தோம்.
ஆனால், அவரோ தற்போது ஒரு படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்துள்ளார் என்பதால் முடிவை மாற்றிக்கொண்டோம்.
இறுதியாக மம்மூட்டியுடன் இணைந்து நடிக்க 'ஷார்மியை' ஒப்பந்தம் செய்துள்ளோம் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments: