• ஹாலிவுட் ரேஞ்ச்சில் ஒன்றரை மணி நேர தமிழ் சினிமா!



    ”போர்க்களம்” படத்தை இயக்கிய பண்டி சரோஜ்குமார் இயக்கும் புதிய படம் “அஸ்த்தமனம்”. வில்லன், பாடல், காதல் எதுவுமில்லாமல் ஒன்றரை மணி (90 நிமிடம்) நேரம் ஓடும் இப்படம் பற்றி அவர் கூறியதாவது:


    ”ஹாலிவுட் படங்கள் ஒன்றரை மணி நேரங்களில் பரபரப்பாக உருவாக்கப்படுகிறது. அதுபோல் தமிழிலும் உருவாக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாளாகவே இருந்தது. அதை இப்படத்தில் நிறைவேற்றி இருக்கிறேன். இதில் வில்லன், பாடல், காதல் எதுவுமே கிடையாது. காட்டுக்குள் ஜாலி பயணமாக டிரக்கிங் செல்லும் 6 பேர் வழிதவறி விடுகின்றனர். அங்கு எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது. அதிலிருந்து அவர்கள் மீள்கிறார்களா...? என்பதுதான் கதை. அப்போது ஒரு சமயம், இருட்டில் படத்தின் ஷூட்டிங் முடித்திவிட்டு படக்குழுவினர் திரும்பும்போது பாதை தெரியாமல் 1 கி.மீட்டர் தூரம் மாறி சென்றுவிட்டோம். அதன்பிறகு ஒரு வழியாக சரியான பாதையை கண்டுபிடித்து காட்டிலிருந்து வெளியில் வந்தோம்” என்று கூறினார்.

    ராஜேஷ், சரண், கனகசபை, விக்டோரியா, வித்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா வனப்பகுதிகளில் 50 நாட்கள் ஷூட்டிங் நடந்தது. ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்ய சித்தார்த் இசையமைக்கிறார். எஸ்.சிவராஜசேகர் தயாரிக்கிறார்

0 comments:

Post a Comment