• ஒசாகா ஆசிய திரைப்பட விழாவில் விக்ரமின் “தெய்வத்திருமகள்”!



    சீயான் விக்ரமின் ”தெய்வத்திருமகள்” ஒசாகா ஆசிய திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது.

    படத்துக்கு படம் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் விக்ரம். அந்த வகையில் குழந்தை தனமான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த “தெய்வத்திருமகள்” படத்தில் விக்ரமுடன் அனுஷ்கா, அமலாபால், குழந்தை சாரா ஆகியோர் நடித்துள்ளனர்.
    கடந்த ஆண்டு வெளியான இந்த சூப்பர் ஹிட் படத்தை இயக்குனர் விஜய் இயக்கியிருந்தார். ஆங்கில படத்தின் தழுவலாக இப்படத்தை மிக நேர்த்தியாக எடுத்து இருந்தார் டைரக்டர் விஜய். இதில் குறிப்பாக விக்ரம் மற்றும் குழந்தை சாராவின் நடிப்பு ரொம்ப பிரமாதமாகவும், அனைவரும் பாராட்டும் படியாகவும் இருந்தது.

    இந்நிலையில் இப்படம் ஒசாகா ஆசிய திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. இதுகுறித்து டைரக்டர் விஜய் கூறியதாவது :

    ”ஒசாகா ஆசிய திரைப்பட விழாவில் ’காட்ஸ் ஓன் சைல்டு’ எனும் பெயரில் ஆங்கில ‌சப் டைட்டிலுடன் திரையிட ”தெய்வத்திருமகள்” படம் தேர்வாகி இருக்கிறது எனக்கு மகிச்சி அளிக்கிறது. மேலும் இப்படம் விருதுக்கான பட்டியலிலும் இடம்பெற்று இருக்கிறது. மார்ச் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடக்கும் இவ்விழாவில் பங்கேற்க நானும், விக்ரமும் செல்கிறோம்.” இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment