வாகை சூடவா படத்தில் கிராமத்துப் பெண்ணாக அறிமுகமான நடிகை இனியா தன் நடிப்பாற்றலால் மக்களை வெகுவாக கவர்ந்தார். இதை தொடர்ந்து மௌன குரு படத்தில் மாடர்ன் கேர்ள் பெண்ணாக நடித்தார்.
இவர் தற்போது இயக்குனர் சிகரம் பாரதிராஜாவின் இயக்கத்தில் ”அன்னக்கொடியும் கொடிவீரனும்” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் மீண்டும் ”வாகை சூட வா” போல் கிராமத்துப் பெண் கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார். இவருடன் கார்த்திகா இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிகை இனியாவின் கதாபாத்திரம் பேசும் படியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் கவர்ச்சி உடைகளில் வெளியான புகைப்படங்களை பார்த்து இனியா கவர்ச்சி வேடத்திற்கு தயாராகிவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து இனியா கூறுகையில், ”ஒரே மாதிரியான கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்தால் மக்களுக்கு அது சீக்கிரமாகவே போராடித்துவிடும். மேலும் அதுமாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பதால் நான் கிளாமருக்கு எதிரியும் அல்ல. கதைக்கு கிளாமர் தேவைப்பட்டால் கண்டிப்பாக கவர்ச்சி வேடத்தில் நடிக்கவும் நான் தயார்” என்று கூறினார்.

0 comments: