• நான் தனுஷின் தீவிர ரசிகை – அம்புலி சனம்



    ”அம்புலி 3டி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானவர் பெங்களூர் நடிகை சனம். இவர் முதல் படத்திலேயே தன் நடிப்பின் மூலம் அனைவரையும் கவனிக்க வைத்தார். இவர் எலெக்ட்ரானிக் இன்ஜீனியர் படிப்பு முடித்துள்ளார்.


    பல பெரிய நிறுவனங்களுக்கு மாடலாக பணிபுரிந்துள்ளார். இவருக்கு “அம்புலி 3டி” படத்தின் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்தவுடனேயே ஓகே சொல்லி விட்டார். அதுவும் முதல் படமே 3டி படம் என்பதால் ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறார்.

    தனுஷின் தீவிர ரசிகையான இவர் ”காதல் கொண்டேன்” படத்தை மட்டும் பல முறை பார்த்திருப்பதாக கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் தனுஷ் படத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாளைய ஆசையாம். தற்போது ஆபாவாணன் படம், மலையாளத்தில் சினிமா கம்பனி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

0 comments:

Post a Comment