மெரினா திரைப்படம் வெற்றிகரமாக 50 நாட்கள் ஓடியதையடுத்து ஊடகம் மற்றும் ரசிகர்களுக்கு இயக்குனர் பாண்டிராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
கொலிவுட்டில் பாண்டிராஜ் இயக்கிய மெரினா திரைப்படம் வெற்றிகரமாக 50 நாட்கள் ஓடியுள்ளது.
இப்படத்தில் நாயகனாக சிவகார்த்திகேயனும் நாயகியாக ஓவியாவும் இணைந்து நடித்துள்ளார்கள்.
மெரினா கடற்கரையை மையமாக வைத்து இயக்கப்பட்ட இப்படம், திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் பாண்டிராஜ், மெரினா திரைப்படம் வெற்றபெற்றது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
மெரினா வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஊடகங்கள், ரசிகர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
மேலும் எங்களது அடுத்த படைப்புகளுக்கும் ஊடகங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments: