நடிகர் பிரபுதேவாவுடன் பிரிவிற்கு காரணம் என்ன என நிருபர்கள் கேட்ட போது, நயன்தாரா அழுது விட்டாராம்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நடிகை நயன்தாரா வருகை புரிந்துள்ளார். ரூ.300க்கான சிறப்பு தரிசன டிக்கெட்டில் சுவாமியை தரிசனம் செய்தார்.
தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், நீண்ட நாட்களுக்கு பிறகு சாமியை தரிசனம் செய்தது மனதுக்கு சந்தோஷமாக உள்ளது. மனதில் இருந்த பாரம் எல்லாம் நீங்கியது போல் உணர்கிறேன் என்றார்.
பிரபுதேவாவுக்கும், உங்களுக்கும் இடையே விரிசல் ஏற்பட காரணம் என்ன என நிருபர்கள் கேட்டபோது, கோயிலில் இந்த மாதிரி கேள்வியை கேட்காதீர்கள் என்று கூறி கண் கலங்கினார்.
அவருடன் வந்த உதவியாளர் கூறுகையில், சிவன் கோயிலில் பிரபுதேவாவும், பெருமாள் கோயிலில் நயன்தாராவும் தரிசனம் செய்யுமாறு ஜோசியர்கள் அறிவுறுத்தியிருந்தனர். அதனால் இருவருக்கும் நல்லது நடக்கும் என்று கூறியிருந்தனர். அதன்படி இருவரும் தரிசனம் செய்துள்ளனர் என்றார்.
இந்த தகவலால் பிரபுதேவா- நயன்தாரா பிரிந்துவிட்டனர் என்ற பரபரப்புக்கு தற்போது முடிவு கிடைத்துள்ளதாக சிலர் கூறுகின்றனர்.
அதே நேரம் பிரபுதேவாவுடன் திருமணத்துக்கு தயாரான போது படங்களே ஒப்புக்கொள்ளாமல் சினிமாவுக்கு முழுக்கு போட இருந்தார் நயன்தாரா.
ஆனால் இப்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் 4 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர்கள் பிரிந்து விட்டது உண்மைதான் என திரையுலகினர் கூறுகின்றனர்.

0 comments: