கொலிவுட்டில் திரு இயக்கும் சமரன் படத்தில் நாயகி த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் விஷால், டொலிவுட் மார்க்கெட்டை பிடிக்க திட்டம் தீட்டி வருகிறார்.
தமிழில் திரு இயக்கிய 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் நாயகன் விஷால், நீது சந்திரா, தனுஸ்ரீ தத்தா, சாரா ஜேன் என மூன்று நாயகிகளுடன் இணைந்து நடித்திருந்தார்.
இப்படத்தை தெலுங்கில் 'கில்லாடி' என்ற பெயரில் மொழிபெயர்த்து, வெளியிட்டு படக்குழுவினர் வசூலை பார்த்துள்ளார்கள்.
இதுகுறித்து நாயகன் விஷால், தமிழில் வெற்றிபெற்ற தீராத விளையாட்டு பிள்ளை தெலுங்கில் வெளியாகியுள்ளது.
நான் எதிர்பார்த்தபடியே படத்துக்கு ஆந்திரா திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று நாயகன் விஷால் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழில் விஷால்-த்ரிஷா ஜோடியின் நடிப்பில் உருவாகும் 'சமரன்' படம் தெலுங்கு மொழியில் வெளியாக இருப்பதாக படக்குழு கூறியுள்ளது.

0 comments: