• ரஜினியை வைத்து இயக்குகிறாரா கே.வி. ஆனந்த்...?



    அயன் மற்றும் கோ வெற்றி படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னை சிறந்த இயக்குனராக நிலைநாட்டிய கே.வி.ஆனந்த் தற்போது ‘மாற்றான்’ படத்தை இயக்கி முடித்திருக்கும் நிலையில்'மாற்றான்' படம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் தமிழ் சினிமா உலகத்தில் ஒளிப்பதிவாளராக காலடி பதித்தவர் என்பது குறிபிடத்தக்கது.

    தற்போது 'ரஜினிகாந்த்' கோச்சடையான் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் கோச்சடையன் படத்திற்கு பின் ரஜினிகாந்த் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் மேலும் கே.வி.ஆனந்த் கதை சொல்லிய விதம் ரஜினியை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்களிடையே கருத்து நிலவுகிறது.

    இதுகுறித்து கே.வி.ஆனந்திடம் கேட்டபோது, ”அவர் அதனை ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை.” என்று கூறினார். மேலும் கே.வி.ஆனந்த் ரஜினியின் 'சிவாஜி' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment