கொலிவுட் நாயகிகள் திரிஷா, கார்த்திகா இணைந்து நடித்த டம்மு படம், ஏப்ரல் 19ம் திகதி திரைக்கு வருகிறது.
தெலுங்கு நட்சத்திர நாயகன் ஜூனியர் என்.டி.ஆருடன் 'டம்மு' படத்தில் த்ரிஷாவும் 'கோ' நாயகி கார்த்திகாவும் இணைந்து நடித்துள்ளார்கள்.
தெலுங்கு புத்தாண்டு தினமான யுகாதி அன்று இப்படத்தின் இசை வெளியாக உள்ளது.
தெலுங்கு பட இயக்குனர் போயபடி சீனு டம்மு படத்தை இயக்கியுள்ளார். கீரவாணி இசையமைத்துள்ளார்.
கொலிவுட்டின் பிரபல நாயகிகளான த்ரிஷா, கார்த்திக்கா இருவரும் நடித்திருப்பதால் தமிழ் பட வட்டாரத்திலும் இப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பு உள்ளது.
தமிழில் 'நாடோடிகள்' படத்தில் நடித்த அபிநயா, டம்முவில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் என்று இயக்குனர் போயபடி சீனு கூறியுள்ளார்.
வருகிற ஏப்ரல் மாதம் 19ம் திகதி டம்மு படம் திரைக்கு வருகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது.

0 comments: