• மீண்டும் நடிக்க ரீமா சென்னுக்கு பச்சைக்கொடி காட்டிய காதல் கணவர்



    மீண்டும் சினிமாவில் நடிக்க கணவர் ஷிவ் கரண் அனுமதி தந்துள்ளதாக நாயகி ரீமா சென் கூறியுள்ளார்.
    டெல்லியில் காதல் கணவர் ஷிவ் கரணுடன் நாயகி ரீமா சென் தன் திருமண வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.


    திருமணத்திற்கு பின்பும் சினிமாவில் நடிக்க கணவர் அனுமதி தந்துள்ளதாக நாயகி ரீமா சென் கூறியுள்ளார்.

    இதுகுறித்து நாயகி ரீமாசென் கூறியதாவது, நான் நடித்த 'கேங்க்ஸ் ஆப் வாசெபெர்' மற்றும் ராகுல் டொலக்கியாவின் படம் என இரு படங்கள் வெளிவர உள்ளன.

    எனக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரிசையாக வந்து இருக்கின்றன. இயக்குனர்களின் திரைக்கதைகளை படிக்கிறேன்.

    சினிமாவில் தொடர்ந்து எனக்கு பிடித்தமான கதாப் பாத்திரங்களில் நடிக்க தயாராக உள்ளேன்.

    இதுவரையில் படங்களில் நான் சிறப்பாக நடித்த கதாபாத்திரங்கள் மாதிரி கிடைத்தாலும் நடிப்பேன் என்று திருமண பூரிப்போடு ரீமாசென்  தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment