• மனம் கொத்திப்பறவை படத்தில் நடித்த நகைச்சுவை நடிகர்கள்


    கொலிவுட்டில் இயக்குனர் எழில் இயக்கியுள்ள 'மனம் கொத்திப்பறவை' படத்தில் நாயகன் சிவகார்த்திகேயன் உட்பட 8 நகைச்சுவை நடிகர்கள் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கொலிவுட்டில் மெரினா திரைப்பட வெற்றிக்குபின்பு நாயகன் சிவகார்த்திகேயன், மனம் கொத்திப்பறவை படத்தில் நடித்து வருகிறார்.

    இயக்குனர் எழில் இயக்கியுள்ள 'மனம் கொத்திப்பறவை' படத்தில் நாயகன் சிவகார்த்திகேயன் உட்பட 8 நகைச்சுவை நடிகர்கள் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மனம் கொத்திப் பறவை படம் முழுமையான நகைச்சுவை திரைப்படமாகும்.

    ஒரு காதல் என்றாலே கிராமத்தில் அரிவாளை தூக்குவார்கள். அதை சமாளித்து வெற்றிப்பெறும் காதலைத்தான் நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள்.

    திரையுலகில் இந்த கதை ஏற்கனவே வந்தது போல இருந்தாலும் திரைக்கதையில் சுவாரஸ்யமாக இயக்குனர் எழில் காட்டியுள்ளார்.

    காரைக்கால் அருகே உள்ள கயத்தூர், மூனாறு பகுதிகளில் தொடர்ந்து நாற்பது நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது.

    மைனா படத்துக்கு பிறகு இமான் இசையில் இப்படத்தின் பாடல்கள் பேசப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment