ராஜேஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் இசை மார்ச் 5-ம் தேதி வெளியானது. படத்தில் ஹன்சிகாவின் பெயர் மீரா. நடிகை சரண்யா உதயநிதியின் அம்மாவாக நடித்துள்ளார்.
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் டிரெய்லரில் சரண்யா உதயநிதியிடம் “அது யாரு சுறாவோ எறாவோ” என்று கேட்பது போல் ஒரு வசனம் வருகிறது. சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது இந்த வசனத்தில் சுறா என்ற பெயர் அடிபடுகிறதே(சுறா என்பது ஒரு பெரிய நடிகர் நடிப்பில் வெளிவந்த படம்) இதில் உதயநிதியின் தலையீடு இருக்கிறதா? எனக் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த இயக்குனர் ராஜேஷ் “படத்தில் உதயநிதியின் அம்மாவாக வரும் சரண்யாவிற்கு ஞாபக மறதி. ஹன்சிகாவின் பெயர் மீரா. மீரா என்ற பெயரை மறந்துவிட்ட சரண்யா சுறாவோ எறாவோ என்று கூறுவது போல் காட்சியமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும் என்னால் எழுதப்பட்டவை. அவற்றிற்கும் உதயநிதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” எனக் கூறினார்.
0 comments: