அழகர் சாமியின் குதிரை படத்திற்காக அப்புகுட்டிக்கு விருது கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது என இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளார்.
கொலிவுட்டில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய அழகர்சாமி குதிரை திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
இந்த படத்தில் அப்புக்குட்டி, சரண்யா மோகன் இணைந்து நடித்திருந்தனர்.
அழகர் சாமி குதிரை திரைப்படத்திற்கு விருது கிடைத்த மகிழ்ச்சியில் இயக்குனர் சுசீந்திரன் உள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் சுசீந்திரன் கூறியதாவது, படத்திற்கு விருது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அப்புக்குட்டிக்கு விருது கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் ஆசை நிறைவேறியிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. அப்புக்குட்டி தாய் தந்தையை இழந்தவன். சினிமா ஆர்வம் ஒன்றையே மூலதனமாக கொண்டு வந்தவன்.
அவனை அழகர்சாமி குதிரை படத்துக்கு கதாநாயகனாக ஒப்பந்தம் செய்த போது இவனை ஏன் கதாநாயகனாக நடிக்க வைக்கிறீர்கள் என்று நிறையபேர் கேட்டார்கள்.
படம் பார்த்த பிறகு அப்புக்குட்டி பிரமாதமாக நடித்து இருப்பதாக பாராட்டினார்கள். இப்போது அவனுக்கு தேசிய அளவில் விருது கிடைத்து இருப்பது எனக்கு சந்தோஷம் என்று கூறியுள்ளார்.
0 comments: