• சினேகா – கல்யாணமும், கமிட்மெண்‌ட்டும்



    திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன் என்று தெ‌ரிவித்திருந்தார் ஜூனில் பிரசன்னாவை திருமணம் செய்யப் போகும் சினேகா. சினேகா தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்று பிரசன்னாவும் கூறியிருக்கிறார். ஆக, திருமணம் என்ற புதிய பந்தம் நடிகை சினேகாவை நம்மிடமிருந்து பி‌ரிக்கப் போவதில்லை.

    விஷயம் இதுவல்ல. கல்யாண பிஸி காரணமாக சினேகா புதிய படங்களில் நடிக்க யோசிக்கிறார் என்றொரு பேச்சு. அதற்கேற்ப கோச்சடையானில் சினேகாவுக்குப் பதில் கல்யாணியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஆனால் இதனை தனது மௌனம் மூலமாகவே மறுத்திருக்கிறார் சினேகா. மேலும் புதிய படமொன்றையும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
    ‌ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கும் ஹ‌ரிதாஸ் படத்தில் சினேகா நடிக்கிறார். உடன் நடிப்பவர் கிஷோர். ரத்னவேலு இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். 

0 comments:

Post a Comment