• இரண்டாவது சூப்பர் ஸ்டார் – விவேக்கின் கண்டுபிடிப்பு



    அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? காது தேய்கிற அளவுக்கு இந்தக் கேள்வியை கேட்டுவிட்டார்கள். ஆனாலும் நம்மாட்களுக்கு திருப்தியில்லை. கிடைக்கிற சந்திலெல்லாம் திணிக்கிற விஷயமாகிவிட்டது இந்தக் கேள்வி. விவேக் இதிலிருந்து சற்றே மாறுபட்டு மேலுமொரு சங்கடத்தை கிளப்பியிருக்கிறார்.


    கஞ்சாகூட்டம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்தவர் இசையைப் பற்றி பேசாமல் காமெடிக்கு தாவினார். கஞ்சாகூட்டம் என்ற பெயரைப் பார்த்தால் இதில் காமெடி அதிகம் இருக்கும் போலிருக்கிறது என்றார். காமெடியிலும் கஞ்சாவிலும் க இருப்பதைத் தவிர இரண்டுக்கும் என்ன ஒற்றுமை? ச‌ரி, விவேக்கின் பேச்சுக்கு வருவோம். ர‌ஜினி சூப்பர் ஸ்டார் என்றால் இரண்டாவது சூப்பர் ஸ்டார் காமெடிதான், காமெடி இருந்தால் படம் ஜெயிக்கும் என்றார்.

0 comments:

Post a Comment