சக்ரி டோலட்டி இயக்கத்தில், அஜித்தின் நடிப்பில் உருவாகியிருக்கும் “பில்லா 2” ரசிகர்கள் மற்றும் மக்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீடு ஏப்ரல் இறுதியில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அஜீத்தின் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்ப்டுகிறது.
”பில்லா 2” இசை உரிமையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. மொத்தம் ஆறு பாடல்கள் படத்துக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா, இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இசைவெளியீட்டு விழாவை ரஜினி முன்னிலையில் மிகப் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்தனர். ஆனால் சில காரணங்களால், ரஜினி வீட்டிலோ அல்லது மண்டபத்திலோ ஆடம்பரமில்லாமல் இந்நிகழ்ச்சி நடக்கும் எனத் தெரிகிறது. இப்படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் நுழைகிறது பிரபல வர்த்தக நிறுவனமான இந்துஜா குழுமம் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: