”ஆதிபகவன்” படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்து நடிக்க இருக்கும் ”பூலோகம்”. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் எனத் தெரிகிறது.
அமீர் இயக்கும் “ஆதி பகவன்” படத்தில் ஜெயம் ரவி நடித்துவருகிறார். கிட்டத்தட்ட இரண்டு வருடமாக நடந்து வரும் இப்படத்தின் சூட்டிங் இன்னும் முடிந்தபாடில்லை. இதையடுத்து எஸ்.பி.ஜெகநாதனிடம் உதவியாளராக இருந்த கல்யாண் இயக்கும் ”பூலோகம்” என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.
பூலோகத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சமீபத்தில் இயக்குனர் கல்யாண் நடிகை நயன்தாராவை சந்தித்து பூலோகம் படத்தின் கதையை கூறியபோது, நயன்தாராவிற்கு படத்தின் கதை பிடித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், நயன்தாரா நடிப்பதாக உறுதியாக சொல்லவில்லை. மேலும் ஜெயம் ரவியுடன் சேர்ந்து நயன்தாரா இதுவரை எந்த படமும் நடித்ததில்லை என்பதால் நிச்சயம் இப்படத்தில் நடிப்பார் என்று நம்பப்படுகிறது. அடுத்த மாதம் இப்படத்தின் சூட்டிங்கை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர்.

0 comments: