அஜித்தின் நடிப்பில் உருவாகும் பில்லாவின் இரண்டாம் பாகமான “பில்லா 2” வை இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்குகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக பார்வதி ஓமனகுட்டன் நடித்திருக்கிறார்.
படத்தின் ஷீட்டிங் ரஷ்யா, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. ”மங்காத்தா” படத்திற்கு பிறகு ’தல’ அஜித் நடிப்பதால் எதிர்ப்பார்ப்பு கூடியிருக்கிறது.
இந்நிலையில், “பில்லா 2” படத்தின் ஷீட்டிங் முடிந்து விட்ட நிலையில், ரிலீஸ்க்கான பரபரப்பு ரசிகர்கள் மற்றும் மக்களிடையே ஏற்ப்பட்டுள்ளது. ஆனால் படத்தினை வெளியிடும் தேதி குறித்து இதுவரை எந்த ஒரு சரியான தகவலும் வரவில்லை.
இதையடுத்து படத்தின் ஆடியோ ரிலீஸை இம்மாதம், அதாவது ஏப்ரல் மாத இறுதியில் நடந்த திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். அதேபோல் படத்தின் ரிலீஸையும் மே மாத இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
0 comments: