• ஆங்கிலம் தெரியாததால் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளானேன்: தனுஷ்


    கொலிவுட்டில் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் 3 படத்தின் கொலை வெறி பாடல் பற்றி தனுஷ் பேட்டியளித்துள்ளார்.
    கொலை வெறி பாடல் குறித்து தனுஷ் பேட்டியளிக்கையில், 3 படம் வெற்றியானதா? இல்லையா? என்று எனக்கு தெரியாது. எனவே அதுபற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை.

    கொலை வெறி பாடல் இந்த அளவுக்கு பிரபலமாகி எனக்கு பெரிய அந்தஸ்தை பெற்றுத் தரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

    இந்த பாடலின் வெற்றி மூலம் முடியாதது எதுவுமில்லை. எல்லாமே முடியக்கூடியது என்று கற்றுக் கொண்டேன்.

    நடனம் ஆடவும், பாடவும் எனக்கு பிடிக்கிறது. கொலை வெறி பாட்டில் ஆங்கில வார்த்தைகள் கலந்ததற்காக விமர்சனங்கள் கிளம்பின.

    நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் எனது உலகத்தில் நான் தான் ராஜாவாக இருந்தேன். நடிகரானதும் எனக்கு ஆங்கிலம் தெரியாததால் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளானேன்.

    என்னுடன் நடித்த நடிகர்-நடிகைக்ள எல்லோரும் வேறு மாநிலங்களில் இருந்து வந்தனர். அவர்களிடம் அவரவர் மொழியில் என்னால் பேச முடியாமலும், நட்சத்திர உணவகங்களில் கூட ஆர்டர் செய்ய முடியாமலும் சிரமப்பட்டேன்.

    ஆங்கில அறிவு இன்மையால் எனது நம்பிக்கை முழுமையாக சிதைந்து போனது. எனது உணர்வுகள் நிறைய பேரிடம் இருப்பதை தெரிந்து கொண்டேன். அதை கொலைவெறி பாடல் மூலம் விமர்சிக்கப்பட்டது.

    மேலும் சொல்வராகவன் இயக்கும் படத்தில் நடிப்பது பற்றி இன்னும் முடிவாகவில்லை, ஆனாலும் இருவரும் சேர்ந்து படம் பண்ணுவோம். இந்திப் படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.

0 comments:

Post a Comment