நடன இயக்குனரான லாரென்ஸ் தமிழ், தெலுங்கு படங்களை இயக்கி, நாயகனாக நடித்து வருகிறார்.
தெலுங்கில் 'ரீபேல்' படத்தை இயக்கிய லாரென்ஸ், இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து அதிரடி நாயகன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் முனி-3 படத்துக்கான திரைக்கதையை மும்முரமாக அமைத்து வருகிறார்.
இதையடுத்து தமிழ் சினிமாவில் வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய 'உயிர் எழுத்து' படத்தில் லாரென்ஸ் நடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளிவர உள்ளது.
மேலும் சபரிஷ், சுனைனா இருவரின் நடிப்பில் 'மைக் செட் பாண்டி' படத்தை இயக்கிய ராசு மதுரவன் இயக்கத்தில் “பரமன்” ஆக்சன் பொழுது போக்கு படத்தில் நாயகன் லாரென்ஸ், ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வருகிறார்.
அவரே இப்படத்துக்கு இசையமைக்கிறார். எல்லோருக்கும் உதவும் இயல்பான கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் அவரை பார்க்கலாம் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.
0 comments: