• ஷங்கர்-வடிவேலு-சிம்புதேவன் கூட்டணியில் இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி 2



    அரசியல் பிரச்சனையில் அல்லாடிய வடிவேலுவை வைத்து படம் செய்ய அனைவரும் தயங்கிய நிலையில் துணிச்சலாக மீண்டும் வடிவேலுவை ஹீரோவாக்குகிறார் இயக்குனர் ஷங்கர்.

    ஆம், இவரின் எஸ் பிக்சர்ஸ் வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசியின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறது.

    இம்சை அரசனின் முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவனே இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். படத்தின் கதை, ஸ்கிரிப்ட் என அனைத்தும் பக்காவாக தயாராகியுள்ளது. இன்னும் சில தினங்களில் படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட இருக்கிறார்கள். படத்தின் பட்ஜெட் 18 கோடிகள் என்பது உபரி தகவல்.

    அதிமுக கூட்டணிக்கு எதிராக வடிவேலு நடத்திய பிரச்சாரம் அவருக்கு படங்கள் இல்லாமல் செய்தது. அவரை வைத்து படம் செய்யக் கூடாது என்ற ரகசிய உத்தரவு திரையுலகில் போடப்பட்டது. அதை மீறி அவரை ஒப்பந்தம் செய்ய யாருக்கும் துணிச்சல் வரவில்லை. இந்நிலையில்தான் தயாரிப்பிலிருந்து தற்காலிகமாக விலகிவிட்டேன் என்று தெரிவித்த ஷங்கர் வடிவேலுவை ஹீரோவாக்கியிருக்கிறார். அதுவும் அவர் ஏற்கனவே தயாரித்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில்.

    இந்தப்படம் குறித்த செய்தி இன்னும் பலருக்கு தெரியாது. அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்போது திரையுலகில் இது புயலைக் கிளப்ப வாய்ப்புள்ளது.

0 comments:

Post a Comment