'மயக்கம் என்ன' படத்துக்குப் பிறகு இயக்குநர் செல்வராகவன் உருவாக்கி வரும் 'இரண்டாம் உலகம்' படத்தின் FIRST LOOK படங்கள் வெளியாகியுள்ளன.
செல்வராகவன், யுவன், அரவிந்த் கிருஷ்ணா கூட்டணியாக இருந்த வேலையில் இந்தப் படம் உருவானது.
இவர்களின் 'ஒயிட் எலிபென்ட்' நிறுவனம் உடைந்து சிதறியதில், இந்தப் படம் உருவாவதும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது, கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் தள்ளிப்போயின.
இந்தப் படத்தின் கதாநாயகனாக தனுஷ், ராணா, அல்லு அர்ஜுன் என மாறிக்கொண்டே இருந்தார்கள். கடைசியில் ஆர்யா -அனுஷ்கா என்பது உறுதியானது.
ஆரம்பத்தில் யுவன், பின்னர் ஜீ.வி.பிரகாஷ், மீண்டும் யுவன், இப்போது ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக மாறியுள்ளார்.
ஒளிப்பதிவு ராம்ஜி, இதன் படப்படிப்பு தொடங்குவதும் நிற்பதுமாக இதோ அதோ என இழுத்தடித்தது. இப்போது இந்தப்படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்கிறார்கள்.
ஸ்டில்களைப் பார்த்தால், ஒரு இனிமையான உணர்வு வருகிறது. படம் பார்க்கும்போது அந்த உணர்வு இருந்தால் நன்றாக இருக்கும் என கோடம்பாக்கத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments: