• கோச்சடையானின் 2-வது கட்ட ஷீட்டிங் தொடங்கியது



    இன்று (17-04-12) கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கும் ”கோச்சடையான்” படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்.

    ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா டைரக்டு செய்ய, கே.எஸ்.ரவிகுமார் இயக்குனர் மேற்பார்வை செய்கிறார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.


    இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்துடன் சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கிஷராப், ஷோபனா ஆகியோர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. லண்டனில் படப்பிடிப்பு முடித்து கொண்டு சென்னை திரும்பிய ரஜினி, சில நாட்கள் ஓய்வில் இருந்தார்.

    இந்நிலையில், படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று (17-04-12) தொடங்குகிறது. அதில், ரஜினிகாந்த் கலந்து கொண்டு நடிக்கிறார். லண்டனில் நடைபெற்ற படப்பிடிப்பில், கதாநாயகி தீபிகா படுகோனே கலந்து கொள்ளவில்லை. திருவனந்தபுரத்தில் நடைபெறும் படப்பிடிப்பில், அவர் கலந்து கொள்கிறார்.

    இதையடுத்து கே.எஸ்.ரவிகுமார், சௌந்தர்யா, மற்றும் படப்பிடிப்பு குழுவினர் நேற்றே திருவனந்தபுரம் புறப்பட்டு போய்விட்டார்கள். ரஜினிகாந்த் இன்று (செவ்வாய்க்கிழமை) விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார்.ர்.

0 comments:

Post a Comment