அஜித் நடிக்கும் ”பில்லா 2” படத்திற்கு இசையமைத்துள்ள யுவன்சங்கர் ராஜா, படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளதாக, புதிய தகவல் வெளியாகியுள்ளது.
”பில்லா 2” படம் அஜீத் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தைப் பற்றி செய்திகளும், வதந்திகளும் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், படத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா நடனமாடி உள்ளதாக வரும் செய்தியால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்டில் உள்ளனர்.
இது பற்றி இயக்குனர் சக்ரி டோலட்டி கூறியதாவது, “படத்திற்கு இசைப் பணியை செவ்வனே செய்துள்ள யுவன் ஷங்கர் ராஜாவை, ஒரு பாடலுக்கு நடனமாட வைக்க முடிவு செய்தேன். ஆனால் அவ்வளவு எளிதாக இதற்கு சம்மத்திக்கவில்லை. பின்னர் ஒரு வழியாக அவரை சம்மதிக்க வைத்தேன். நிச்சயம் அந்த பாடல் ரசிகர்களை அதிகமாக கவரும்” என்று கூறினார்
இம்மாத இறுதியில் இசை வெளியீடும், அடுத்த மாதம்(மே மாதம்) இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

0 comments: